Skip to main content

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

 Indian Union Muslim League candidates announced

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து வருகின்றன.

 

இந்த நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் இரு கட்சிகளிடையே கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது. பிறகு, போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 

 

 Indian Union Muslim League candidates announced

 

அதன் தொடர்ச்சியாக, இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி- முஹம்மது அபூபக்கர், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி- முஹம்மது நயீம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி- அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த கட்சியின் வேட்பாளர்கள் 'ஏணி' சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்