Published on 11/12/2018 | Edited on 11/12/2018

தற்போது 5 மாநில தேர்தல்களின் முடிவுகளும் வெளியாகி வருகின்றன. பாஜக அனைத்து மாநிலங்களிலும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதுதொடர்பாக பல மீம்கள் வந்த வண்ணம் உள்ளன. பாஜக தேர்தல்களில் வென்றபோது இந்திய வரைபடத்தில் வென்ற இடங்களையெல்லாம் காவி நிறத்தில் மாற்றி வெளியிட்டனர். தற்போது அதை காவியெல்லாம் கலராக மாறும் தருணம் என குறிப்பிட்டு நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர். இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.