Published on 23/03/2022 | Edited on 23/03/2022

2022-23 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, அதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டநிலையில், நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் மற்றும் கேள்வி நேரம் தற்போது நடைபெற்றுவருகிறது.
இன்றைய கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் 507 வாக்குறுதிகளில் 269ஐ மட்டுமே நிறைவேற்றியுள்ளது. ஆனால், திமுக அரசு முதல் ஆண்டிலேயே 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு அவற்றில் 171 வாக்குறுதிகளை செயல்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார். மேலும், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் மக்களுக்கு பயன்படும் அறிவிப்புகள் இருந்தால் அவற்றையும் நிறைவேற்றுவோம்" எனத் தெரிவித்தார்.