Published on 19/05/2018 | Edited on 19/05/2018
கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாத நிலையில், வாக்கெடுப்பிற்கு முன்பாகவே முதலமைச்சர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரி இருந்த குமாரசாமிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா இன்று மாலை விடுத்தார். அதன்படி, சுமார் 7.15 மணியளவில் ராஜ் பவனுக்கு சென்ற குமாரசாமி ஆளூநரை சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, ‘’வரும் திங்களன்று 21.5.2018 ல் கந்தீரவா ஸ்டேடியத்தில் முதலமைச்சராக பதவியேற்கிறேன். இந்த பதவியேற்பு விழாவில் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள்’’ என்று கூறினார்.