Skip to main content

“செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்ற ஆளுநர்” - அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேட்டி

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

"Governor who wants to remove Senthilbalaji" - Minister Ponmudi sensational interview

 

செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி வகித்து வந்த மின்சாரத்துறை தற்பொழுது நிதித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தங்கம் தென்னரசுவிற்கு கூடுதல் துறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை தமிழக அரசு இன்று காலை ஆளுநருக்கு அனுப்பியது.

 

இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழக்கறிஞர் ஆர்.என்.இளங்கோவுடன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு இருக்கும் காரணத்தால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று 31/05/2023 அன்று ஆளுநர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்திற்கு முதலமைச்சர் மறுநாளே பதில் கடிதம் எழுதி இருந்தார். வழக்கு இருக்கும் காரணத்தால் அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய அவசியம் கிடையாது. அப்படி இருக்குமானால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வழக்கு நிலுவையில் இருக்கிறது. அமித்ஷா பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா? என்று வினவியுள்ளார். இன்று 78 மத்திய அமைச்சர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் 33 பேர் மீது வழக்கு இருக்கிறது என ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

 

இன்று மதியம் முதலமைச்சர், செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத் துறையை தங்கம் தென்னரசுவிற்கும் மதுவிலக்குத் துறையை முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக கொடுப்பதாக ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார். அமைச்சரவை மாற்றம் செய்யும் போது ஆளுநரை கேட்டு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும் அமைச்சரவையை மாற்றியுள்ளோம் என ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி அமைச்சரவையை மாற்றியுள்ளதை ஆளுநருக்கு கடிதம் மூலம் முதல்வர் தெரிவித்தார்.

 

உடல்நலம் குன்றியுள்ள செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த இரண்டு துறைகளையும் இரண்டு அமைச்சர்களுக்கு மாற்றியுள்ளோம் என கடிதம் எழுதி இருந்தார். ஆனால், ஆளுநர் மீண்டும் முதல்வருக்கு, ‘நீங்கள் சொல்லியுள்ள காரணமெல்லாம் தவறாக வழிநடத்துதலாக உள்ளது மற்றும் சரியான தகவல்கள் அல்ல’ என்று கடிதம் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசித்து சில விதிகளை சுட்டிக்காட்டி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் பாஜகவின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என்பது இக்கடிதங்களின் மூலம் உங்களுக்கே தெரியவரும்” எனத் தெரிவித்தார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்