Skip to main content

பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை மையப்படுத்தி தேர்தலைச் சந்திப்போம்! - காங்கிரஸ்

Published on 04/03/2018 | Edited on 04/03/2018

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், கடந்த 14 ஆண்டுகளாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் இருக்கிறது. இந்நிலையில், பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னிறுத்தி வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்போம் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Congress

 

மேலும், ஆளும் சிவராஜ் சிங் சவுகானை கோஸ்நவீர் (வெற்று வாக்குறுதிகளின் நாயகன்) எனவும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கே.கே.மிஷ்ரா, ‘சிவராஜ் சிங் சவுகானின் பன்னிரெண்டு ஆண்டுகால ஆட்சியில், கிட்டத்தட்ட 13ஆயிரம் தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார். அதில் 9,500 வாக்குறுதிகளை இதுவரையில் அவர் நிறைவேற்றவேயில்லை. அவையெல்லாம் வெறும் வாய்மொழியில் சென்றுவிட்டதால், அவரை கோஸ்நவீர் என அழைக்க இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

 

மத்தியப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த கோலராஸ் மற்றும் முங்கோலி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது ஆட்சி மாற்றத்துக்கான விதை என காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. 

 

2003ஆம் ஆண்டு ம.பி. சட்டமன்றத் தேர்தலின்போது, அப்போது முதல்வராக இருந்த திக்விஜய் சிங்கை (காங்கிரஸ்) மிஸ்டர் பண்டதார் (கெட்டுப்போனவர்) என பா.ஜ.க.வினர் அழைத்தனர். தற்போது சிவராஜ் சிங் சவுகானை அதேபோல கோஸ்நவீர் என்று அழைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

சார்ந்த செய்திகள்