தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்து இருந்தார். அதே போல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று ரசிகர்களை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்தித்து பேசும் போது, எனக்கு பணம் புகழ் வேண்டாம். நினைத்ததைவிட பல மடங்கு அவற்றை நீங்கள் எனக்கு கொடுத்துள்ளீர்கள் என்று கூறினார். அதோடு, 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்று கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த், மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தி கட்சியின் பெயரை அறிவிக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
இதனையடுத்து தேர்தல் நெருங்கும் கடைசி நேரத்தில், ரஜினி தன்னோட கட்சியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். மாதிரி முதல் தேர்தலிலேயே பெரிய வெற்றி என்கிறது தான் ரஜினி தரப்பின் எதிர்பார்ப்பு என்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்து புது அணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பா.ஜ.க.வை ஆதரிப்பதா, ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வதை நம்பலாமா என்ற ஆலோசனையிலும் ரஜினி தரப்பு இருப்பதாக கூறுகின்றனர். அதேநேரத்தில், அ.தி.மு.க. தரப்பில் இருந்து முக்கியமான அமைச்சர்கள் சிலரிடம் இருந்தே... ‘நீங்க கட்சியைத் தொடங்கும் நேரத்தில் நாங்க உங்க பக்கம் வந்துடுவோம்னு தூது விடப்பட்டிருப்பதாக சொல்கின்றனர். முதல்வர் எடப்பாடிக்கு எதிராக அதிருப்தி அணி ஒண்ணு அ.தி.மு.கவில் வேகமெடுத்து வருவது எடப்பாடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக சொல்கின்றனர்.