வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி’. இதில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அண்ணன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி செம வைரலானது. இந்த படம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், திரௌபதி படத்தை குடும்பத்துடன் பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பாட்டாளிகளுடன் திரௌபதி திரைப்படம் பார்த்தேன். இன்றைய சமூகத்திற்கு தேவையான பல செய்திகளைச் சொல்லும் படம். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம் என்று கூறியிருந்தார்.
ஐயா@drramadoss 'பாட்டாளிகளுடன்' என்றா சொன்னீர்கள்.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) February 28, 2020
என் புரிதலுக்கு பாட்டாளி என்றால் #வியர்வை_சிந்தி_உழைக்கும்_வர்க்கம்
ஐயா என் கண்ணுக்கு எட்டிய வறை உயர்ந்த உடை மற்றும் செல்வங்கள் நிறைந்த சீமந்தர்கள் நிறைந்து புகைப்படம்.
#பாட்டாளிகள் இனியும் உங்களை நம்பமாட்டார்கள். pic.twitter.com/ISYiRjZCZR
இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த கருத்துக்கு தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதில் "ஐயா @drramadoss 'பாட்டாளிகளுடன்' என்றா சொன்னீர்கள். என் புரிதலுக்கு பாட்டாளி என்றால் #வியர்வை_சிந்தி_உழைக்கும்_வர்க்கம் ஐயா என் கண்ணுக்கு எட்டிய வறை உயர்ந்த உடை மற்றும் செல்வங்கள் நிறைந்த சீமந்தர்கள் நிறைந்து புகைப்படம். #பாட்டாளிகள் இனியும் உங்களை நம்பமாட்டார்கள் என்று கூறியுள்ளார். இந்த கருத்துக்கு திமுகவினர் ஆதரவாகவும், பாமகவினர் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.