Skip to main content

தி.மு.க. எம்.பி.யை தாக்க முயன்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ? ஒரு எம்.பி.க்கே பாதுகாப்பு இல்லை... ஸ்டாலின் கேள்வி!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020


 

dmk

 


கரோனா தாக்கத்தால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தில் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப் போய்விட்டன. நோயோடு வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்கிற ரீதியில் எடப்பாடி அரசும் மக்களைக் கைவிட்டுவிட்டது. இந்த நிலையில், மக்களிடமிருந்து லட்சக்கணக்கான அழைப்புகள் தி.மு.க.வின் பொது உதவி எண்ணிற்கு வருவதால், அந்த உதவி எண் மூலம் பெறப்பட்ட 6,23,914 கோரிக்கை மனுக்களை இரண்டாவது முறையாக முதலமைச்சரின் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். "எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் தி.மு.க.வால் பெறப்பட்ட இந்தப் பெரிய அளவிலான கோரிக்கைகள், தமிழக மக்கள் பெருந்துயரத்தில் இருப்பதின் சான்றாகும்" என்று இந்த மனுக்களைச் சமர்ப்பிக்கும் போது மு.க.ஸ்டாலின் கூறினார்.
 


இதனையடுத்து தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நாமக்கல் எம்.பி.யை அ.தி.மு.க. எம்.எல்.ஏ தாக்க முயற்சித்தது தொடர்பாக கருத்து கூறியுள்ளார். அதில், நாமக்கல் எம்.பி. சின்ராஜை, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் தரக்குறைவாகப் பேசியும் அடிக்கவும் முயற்சித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஸ்கரை அழைத்துக் கண்டிக்கும் தைரியம் தமிழக முதல்வருக்கு இல்லை என்பதால் அதனைத் தமிழக ஆளுநராவது செய்ய வேண்டும்! ஒரு எம்.பி.-க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்