தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. பேரிடர் நேரத்தில் அரசு இயந்திரம் எப்படி இயங்கும் என்று சிறுவன் சுஜித் விஷயத்தில் மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் தோல்வியை சந்தித்த திமுக வரும் 10-ந் தேதி பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்துள்ளது. தி.மு.க.வைப் பொறுத்தவரை இடைத் தேர்தல் தோல்வியை விட அதிமுக வாங்கிய வாக்குகளுக்கு திமுக வாங்கிய வாக்குகளுக்கும் இடையேயான வித்தியாசம் அதிகமாக இருந்துள்ளது. இது திமுக தலைமைக்கு கொஞ்சம் ஹைவோல்ட் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு தற்போது கூடவிருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். இதில் தோல்விக்கான காரணங்கள் விவாதிக்கப்படலாம் என்றாலும், முன்பு மாதிரி அங்கே நீண்ட விவாதங்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்கிற நிலைமை கட்சி சீனியர்களின் ஆதங்கமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்கூட்டியே தலைமையால் தீர்மானிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பேசுகிற வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. அதோடு அவங்களும் சாதக பாதகங்களை கட்சியின் தலைமை வருத்தப்பட கூடாது என்பதற்காக பிரச்சனைகளை லைட்டாக தொட்டுப் பேசக்கூடிய நிலை இருக்கும் என்கிற வருத்தம் தி.மு.க.விலேயே பலரிடமும் இருக்கிறது என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.