சமீபத்தில் மேட்டூர் அணையைத் திறக்கப்போன எடப்பாடியை, தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து விசாரித்த போது, மேட்டூர் அணை திறப்புக்காக சேலத்துக்குப் போன எடப்பாடியை, கே.பி.ராமலிங்கம் சந்தித்து ஏறத்தாழ 40 நிமிடம் பேசியிருக்கிறார். மு.க.அழகிரியின் ஆலோசனைப்படிதான் இந்தச் சந்திப்பு நடந்தது என்று, ராமலிங்கம் தரப்பிலேயே டாக் அடிபடுவதாகச் சொல்கின்றனர்.
இந்தச் சந்திப்பின் போது, ’ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் நிவாரண உதவிகளைச் செய்யும் தி.மு.க. அதற்கான 90 சதவிகித நிதியையும், அதற்கான பொருட்களையும் தொழிலதிபர்கள், காண்ட்ராக்டர்கள், வியாபாரிகள் என்று பல தரப்பினரையும் கட்டாயப்படுத்தித்தான் வாங்கியிருக்கிறது என்று எடப்பாடியிடம் ராமலிங்கம் தரப்பு சொன்னதோடு, அது சம்பந்தமான பட்டியலையும் கொடுத்திருப்பதாகச் சொல்கின்றனர். இதை எடப்பாடி விரைவில் பகிரங்கமாக்குவதோடு தி.மு.க. மீது தாக்குதல் தொடுக்கப் போகிறார் என்றும் கே.பி.ராமலிங்கம் தரப்பில் சொல்கின்றனர். அதோடு, இந்தச் சந்திப்பின் போது, எடப்பாடியிடம் மு.க.அழகிரியை ராமலிங்கம் பேச வைத்ததாகச் சொல்லப்படுகிறது.