Skip to main content

ஆட்சி அமைக்க தேவையான இடங்களை கைப்பற்றியது காங்., - மஜத! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 15/05/2018 | Edited on 15/05/2018
sith

 

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களை காங்கிரஸ் கட்சியும் மஜத கட்சியும் கைப்பற்றியது என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

 

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது.  மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 2 இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.   இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 214 தொகுதிகளில் 99 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.  காங்கிரஸ் 76 தொகுதியிலும் , மஜத 38 தொகுதியிலும், சுயேட்சை 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

 

ஒரு தொகுதியில் மட்டும் சுயேட்சை முன்னணியில் உள்ளது என்றும்,  இன்னும் 8 தொகுதிகளில் மட்டும் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவு அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   

சார்ந்த செய்திகள்