
அதிமுக பொதுக்குழு விவகாரத்தை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரிய விவகாரத்தில் நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், இந்த வழக்கை கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இருந்து மாற்றக்கோரி தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு நேற்று முறையிட்டது.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இது நீதித்துறையைக் களங்கப்படுத்தும் கீழ்த்தரமான செயல் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு இன்று மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பே வாதிட விரும்புவதாக ஓபிஎஸ் தரப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.