Published on 31/07/2019 | Edited on 31/07/2019
ஆடிப்பெருக்கையொட்டி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் முதல்முறையாக வைகைப் பெருவிழா 2019 என்ற மாநாட்டை மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. மதுரை புட்டுத்தோப்பு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த மாநாடு 12 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ''சரியாகச் சொல்லவேண்டும் என்றால் நான் பிறந்ததே மாட்டுத் தொழுவத்தில்தான். எங்கள் வீட்டில் பால் கறந்து, வீடு வீடாகப் பால் ஊற்றித்தான் படித்தேன்.
அதனால்தான் இதைச் சொல்கிறேன். ரஜினிகாந்த் ரீல் லைஃபில் அண்ணாமலை என்றால், இந்த எச்.ராஜா ரியல் லைஃபில் அண்ணாமலை. எப்படி ஓர் அரசாங்கத்தால் ஐந்து முதல் பத்து வருடங்களுக்குள் இந்திய பசு இனங்களையெல்லாம் அழித்து, ஜெர்சி இனப் பசுக்களை இங்கு கொண்டு வர முடிந்ததோ, அதே போல நம்மாலும் நம்முடைய இந்திய இனங்களை மீட்டெடுக்க முடியும்'' என்று பேசினார்எச்.ராஜா. மேலும் பசுவின் உடலினுள் 13000 தெய்வங்கள் உள்ளன. எனவே பசுவும் மற்ற விலங்குகளும் ஒன்றல்ல. இடதுசாரி, தமிழ்த் தேசியம் என மக்களின் மூளை குப்பைத் தொட்டியாக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என எச் ராஜா தெரிவித்தார்.