விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் அவர்களின் 307வது பிறந்தநாள் விழாவில் அவருக்கு மரியாதை செலுத்திய பாஜக தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் தனக்கு அதிகாரம் இருப்பதால் யாரையும் மிரட்டி விடலாம் என்ற பழைய பாணியை திமுக கைவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தமிழக நிதியமைச்சர் தியாகராஜனுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் நேற்று முகநூலில் வார்த்தைப்போர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "முதன்முதலில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அறிவித்தது பேரறிஞர் அண்ணா. அண்ணா வகுத்த பாதையிலிருந்து இன்று திமுக விலகி இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. திமுக தன்னுடைய பழைய அரசியல் பாணியிலிருந்து வெளிவர வேண்டும். கிராமத்திலிருந்து வந்தவன் எனவே மிரட்டி விடலாம் என நினைக்க வேண்டாம். நாளையே என் தோட்டத்தில் விவசாயம் செய்வேன், பிழைத்துக்கொள்ளுவேன். உங்களால் முடியுமா? அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்க நான் ஒன்றும் இயேசு கிடையாது. அடித்தால் திருப்பி அடிப்பேன். என்னைப் பொறுத்தவரை அந்த பதிலடி கொடுத்ததில் எந்த தவறும் கிடையாது" எனக் கூறினார்.