பி.இ., பி.டெக்., ஆகிய பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் சேர்க்கைக்கு வரும் 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
டிப்ளமோ மற்றம் பி.எஸ்சி., நேரடியாக பி.இ., பி.டெக். பொறியியல் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்து படிக்க முடியும். வரும் 10ஆம் தேதி முதல் இதற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.8.2020. விண்ணப்பங்களை www.accet.co.in / www.accetedu.in / www.accetlea.com என்ற இணையத்தளத்தின் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்களையும் இதே இணையத்தளங்களின் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்திற்கான பதிவுக்கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக இணையத்தளம் வாயிலாக செலுத்தலாம். இணையத்தளம் மூலமாக பதிவுக்கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள், ''The Secretary, Second Year BE / B.Tech Degree Admission - 2020-21, ACGST, Karaikudi, payable at Karaikudi'' என்ற பெயரில் 10.8.2020 அன்றிலிருந்து பெறப்பட்ட வரைவோலையை (டிடி) பதிவுக்கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி. பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் கிடையாது.
இணையத்தள வசதி இல்லாதவர்கள், விண்ணப்பித்தல், வரைவோலை செலுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை (டி.ஃஎப்.சி) பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கையாக அனைத்து டி.ஃஎப்.சி. மையங்களிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
நடப்புக் கல்வி ஆண்டில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வும் இணையத்தளம் மூலம் மட்டுமே நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு www.accet.co.in / www.accetedu.in / www.accetlea.com என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அல்லது, 044-22351014, 22351015 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.