தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அமமுக தேர்தல் பொறுப்பாளர் வெற்றிவேல் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக அரசு 118 எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை எட்ட முடியாமல் போகும் என்பதால், ஆளும் கட்சியினர், ஓட்டு எண்ணிக்கை அன்று, வன்முறையை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
குறுக்கு வழியில் வெற்றி பெற முயலவும், தோல்வி முகம் வந்தால், தேர்தல் முடிவுகளை நிறுத்தவும், பெருமளவில் ரவுடிகளை, ஆளும் கட்சியினர் ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.
எனவே, ஓட்டு எண்ணும் மையங்களில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஓட்டு எண்ணும் மையங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மத்திய ரிசர்வ் படை மற்றும் துணை ராணுவ வீரர்களை போதுமான அளவு, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.