Published on 26/04/2021 | Edited on 26/04/2021

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு.தம்பிதுரையின் இளைய சகோதரர் மு.ராஜா உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.
பாசமிகு சகோதரரை இழந்துவாடும் அன்புச் சகோதரர் டாக்டர் தம்பிதுரைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், ராஜாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.” இவ்வாறு கூறியுள்ளனர்.