Published on 01/04/2019 | Edited on 01/04/2019
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று சாத்தூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

மக்களை ஏமாற்றி இனி வாக்கு வாங்க முடியாது. சினம் கொண்ட சிங்கமான அதிமுக, மதம் கொண்ட யானை ஆன திமுகவை விரட்டி அடிக்கும். துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதற்கு ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் டெபாசிட் வாங்க மாட்டார்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கம் என்று கூறினார்.