Published on 22/04/2018 | Edited on 22/04/2018

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க. சார்பில் 3 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெற்றி பெற சாத்தியமில்லை. தமிழக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அ.தி. மு.க. கட்சி தலைவர்களால் தீர்க்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது கர்நாடகத்தில் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. இவ்வாறு கூறினார்.