Skip to main content

தி.மு.க.விற்கு எதிராகக் களமிறங்கும் அ.தி.மு.க., பா.ஜ.க... ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

dmk


கரோனா காலத்திலேயே 30க்கும் மேற்பட்ட வன்கொடுமை புகார்கள் சம்பந்தமாக அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆதித்தமிழர் பேரவை அதியமான் போன்றோர்கள் சுட்டிக்காட்டி, இது தி.மு.க.வுக்கு எதிரான அரசியல் நடவடிக்கை என்று கூறியுள்ளார்கள்.
 


அதனால் தான் மறுநாளே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மா.செ.க்கள் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின். ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் ஆகியோர்களின் பேச்சுகளால் தி.மு.க.வுக்கு எதிராகப் பட்டியல் இன மக்களைத் திருப்பும் வேலையில் பா.ஜ.கவும் அ.தி..மு.க.வும் தீவிரமாக இருப்பது பற்றியும், கரூர் செந்தில் பாலாஜி, கோவை கார்த்திக் போன்ற எம்.எல். ஏக்களை கைது செய்து உள்ளே தள்ள திட்டமிடுவதையும், சமூக வலைத்தளங்களில் அரசை அம்பலப்படுத்துவோரை கைது செய்வதைத் தடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு தொண்டருக்கும் தி.மு.க. வழக்கறிஞர் அணி பாதுகாப்பளிக்கும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்