
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி சத்யநாராயணா இந்த தீர்ப்பை வழங்க இருக்கிறார். இந்த தீர்ப்பு வந்தால் அதிமுக ஆட்சி கவிழும் என டிடிவி தினகரன் கூறி வருகிறார். மேலும் எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று 18 எம்எல்ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இன்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். சசிகலாவை சந்தித்த பிறகு, 22 எம்எல்ஏக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு தினகரன் அறிவுறுத்தியுள்ளார்.
தீர்ப்பு வெளிவரவுள்ள நிலையில் ஆளும் அதிமுக, அந்த எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவவதாக செய்திகள் வெளியானதால், 18 எம்எல்ஏக்களை குற்றாலத்தில் தங்க வைப்பதற்காக ஏற்பாடுகளை செய்யுமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை குற்றாலத்தில் தங்க வைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் டிடிவி தினகரனுக்கு ஆதரவான எம்எல்ஏக்களான கருணாஸ், ரத்தினசாபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகியோரும் குற்றாலத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன