காவலர் தேர்வில் இளைஞர் ஒருவர் நூதன முறையில் காப்பியடித்த சம்பவம் பிகாரில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் முசாபர்பூரில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று தேர்வெழுதிய தனசெய் என்ற இளைஞரின் நடவடிக்கை ஆரம்பம் முதலே வித்தியாசமாக இருந்ததுள்ளது. இதனால் தேர்வு கண்காணிப்பாளர்கள் அவரை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது அவர் தேர்வு எழுதுவதை போன்று பாவலா செய்து கொண்டே வாயை அசைத்துக்கொண்டு இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தேர்வு கண்காணிப்பாளர் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் ஹெட் போனை பயன்படுத்தி யாரிடமோ கேள்விகளுக்கான பதிலை கேட்டுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.