கர்நாடக முதல்வராக இருந்து வந்த எடியூரப்பா கடந்த 26ம் தேதி தன்னுடைய பதவியை ராஜினமா செய்தார். இதன்மூலம் கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக இருந்தும், ஒரு முறை கூட முதல்வர் பதவியை 5 ஆண்டுகாலம் முழுமையாக நிறைவு செய்ய முதல் முதல்வர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கர்நாடக மாநில முதல்வராக முதல்முறையாக கடந்த 2007ம் ஆண்டு பதிவியேற்ற எடியூரப்பா 8 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். நவம்பர் 12ம் தேதி பொறுப்பேற்ற அவர் 19ம் தேதி ராஜினாமா செய்தார். இரண்டாவது முறையாக 2008ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி பதிவியேற்ற அவர், 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி வரை 1,158 நாட்கள் முதல்வராக இருந்தார். அதன் பிறகு 2018ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி பதவியேற்று 23ம் தேதி வரை 7 நாட்கள் முதல்வராக பதவியில் இருந்தார். அடுத்து நான்காவது முறையாக 2019ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பதவியேற்று 2021ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி வரை 730 நாட்கள் முதல்வராக பதவியில் இருந்தார். நான்கு முறை முதல்வராக இருந்தும் ஒருமுறை கூட எடியூரப்பா 5 ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்யவில்லை. 4 முறை பதவி வகித்த அவர் கர்நாடகாவின் முதல்வராக 1,927 நாட்கள் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.