Skip to main content

மணப்பெண் கிராமத்திற்குத் திருமண ஊர்வலத்துடன் வந்த மணமகனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 29/01/2025 | Edited on 29/01/2025
Without Bride As No Wedding Was Planned In Himachal Pradesh

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், உனா மாவட்டத்தில் உள்ள நாரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க, பக்கத்து வீட்டுக்காரரான ராஜிவ் என்பவரின் மனைவி மனு ஒரு பெண் பார்த்துள்ளார். அதன்படி, மணமகனுக்கும் மணமகளுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரும் நேரில் சந்திக்காமல் தொலைப்பேசி மூலம் பேசி வந்துள்ளார்கள்.

இந்த நிலையில், நாரி கிராமத்தில் இருந்து பெண்ணின் ஊரான சிங்கா கிராமத்திற்கு மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் திருமண ஊர்வலம் வந்துள்ளனர். ஆனால், அந்த கிராமத்தில் எந்தவொரு திருமணமும் திட்டமிடப்படவில்லை என்று மணமகனுக்கு தெரியவந்துள்ளது. இதனால், இடைத்தரகரான மனு, மணமகளை கண்டுபிடித்து விடுவதாகக் கூறி அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளார். 

இதையடுத்து, மணமகனின் தரப்பினர் மணமகளின் புகைப்படத்தை அந்த கிராமத்தினரிடம் காட்டி விசாரித்த போது, அப்படியொரு ஒரு பெண் அங்கு இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், மனுவை தொடர்பு கொண்டு பேசிய போது மணப்பெண் விஷப் பொருளை உட்கொண்டதாகவும், பஞ்சாபின் நவன்ஷஹர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், மனுவை சுற்றி வளைத்து பிடித்த மணமகன் தரப்பினர் சிங்கா கிராமத்திற்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க ரூ.50,000 வாங்கியதாகக் கூறப்படும்  ராஜிவ் மற்றும் மனு தம்பதியினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்