Skip to main content

விவசாயியின் உயிரைக் குடித்த ‘வேட்டை விளையாட்டு!’

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
விவசாயியின் உயிரைக் குடித்த ‘வேட்டை விளையாட்டு!’

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படும் ‘வேட்டையாடும் யுக்திகளை’ பார்த்து அதை முயற்சித்துப் பார்த்ததில், அந்தவழியாக சென்ற விவசாயி ஒருவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரெட்டப்பா ரெட்டி. இவர் சிறுவயதில் இருந்தே இருசக்கர வாகனங்களைத் திருடும் பணியில்(!) ஈடுபட்டு, பலமுறை சிறை சென்றவர். இவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் உயிர் பிழைத்திருப்பதற்காக வேட்டையாடும் யுக்திகளை கவனமாக பார்த்துள்ளார். அதில் வருவது மாதிரி புதர் மண்டிய காடுகளில் வலைகளை அமைத்து காட்டு விலங்குகளை வேட்டையாடியும் வந்துள்ளார். இதனை கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்படி கடந்த திங்கள்கிழமை இரவு இதேபோல் ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கங்காவரம் மண்டலத்தில் உள்ள காட்டில் நாட்டுத்துப்பாக்கியைக் கொண்ட வலை ஒன்றைத் தயார் செய்துள்ளார். இதில் உள்ள நாட்டுத்துப்பாக்கியில் காப்பர் வயர்கள் மற்றும் கயிறுகள் மூலம் தானாக இயங்குமாறு தயார் செய்யப்பட்டிருக்கும். இதைக் கடந்துசெல்லும் விலங்குகள் இந்த காப்பர் வயரை தொந்தரவு செய்யும்போது நாட்டுத்துப்பாக்கி இயங்கி, அந்த உயிரினம் தாக்கப்படும்.

கடந்த திங்கள்கிழமை இரவு 10.30 மணியளவில் அந்த வழியே காணமற்போன பசுமாட்டினைத் தேடி அமரா என்ற விவசாயி மற்றும் அவரது உறவினர் லட்சுமனா, செங்கப்பா ஆகிய மூவரும் தேடிச்சென்றுள்ளனர். அப்போது அமரா அங்கிருந்த காப்பர் வயரை மிதித்ததில் துப்பாக்கி தானாக இயங்கி அமராவின் மூட்டுப்பகுதியில் காயம் ஏற்படுத்தியுள்ளது. கடுமையான ரத்தப்போக்கினால் அமரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இரவு 2 மணியளவில் தனது ‘வேட்டைப்பரிசை’ எடுக்கவந்த ரெட்டப்பாவை புதர்களுக்குள் மறைந்திருந்த அமராவின் உறவினர்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்