Published on 14/12/2018 | Edited on 14/12/2018
சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான விவோ, உத்தரபிரதேச மாநிலத்தில் 169 ஏக்கரில் இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இங்கு ஏற்கெனவே 50 ஏக்கரில் அந்நிறுவனத்தின் ஆலை உள்ளது, அதன் அருகே இரண்டாவது உற்பத்தி ஆலையை தொடங்க விவோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய ஆலைக்காக ரூ 4,000 கோடியை விவோ நிறுவனம் உத்தரபிரதேச மாநிலத்தில் முதலீடு செய்ய உள்ளது. இதற்கு முன்பாக 2017-ல் சாம்சங் நிறுவனம் ரூ 4,915 கோடியை முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது. அதன்படி விவோ நிறுவனத்தின் இந்த 4,000 கோடி ரூபாய் முதலீடு என்பது உத்தரபிரதேச மாநிலத்தில் ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களின் இரண்டாவது பெரிய முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது.