Skip to main content

வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ தளபதி பாரத் சிங் காலமானார்

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
வீர் சக்ரா விருது பெற்ற முன்னாள் ராணுவ தளபதி பாரத் சிங் காலமானார்

இந்திய ராணுவத்தில் விங் கமாண்டராக பணியாற்றிய பாரத் சிங், கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானத்தை இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் சுட்டு வீழ்த்தினார். மெச்சத்தக்க விதத்தில் பணியாற்றிய காரணத்தால் ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதான ‘வீர் சக்ரா’ விருது பாரத் சிங்-க்கு அப்போதைய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வழங்கினார். மத்தியப்பிரதேசம் மாநிலம் பன்னாவில் வசித்து வந்த பாரத் சிங் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.

சார்ந்த செய்திகள்