![வ்](http://image.nakkheeran.in/cdn/farfuture/ldRBlZ9liHJuxZimdpxVZCf6yC2CV4xJyrKBiSqcnkA/1534420032/sites/default/files/inline-images/vajpayee%201.jpg)
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாய்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல்நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
மூட்டுவலி பிரச்சனையினால் அவதிப்பட்டு வந்த வாஜ்பாய்க்கு கடந்த இருபது ஆண்டுகளில் 10 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவரால் சரிவர பேசமுடியாமல் போனதும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். 94 வயதாகும் வாஜ்பாய்க்கு வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
தற்போது நிமோனியா தாக்கம் காரணமாக வாஜ்பாயின் இரண்டு நுரையீரல்களும் நல்ல நிலையில் இல்லை என்றும், சிறுநீரகங்களும் பலவீனமாக உள்ளதால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து, வாஜ்பாய் நலம் பெற வேண்டி பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனை வருகின்றனர். வாஜ்பாயின் சொந்த ஊரான குவாலியரில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவர்கள் யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்தனர்.