Skip to main content

மேற்கு வங்க பெயரை மாற்ற இன்னும் ஒப்புதல் தரவில்லை- மம்தா பானர்ஜி

Published on 15/11/2018 | Edited on 15/11/2018

 

mamta


கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி ஒரு மனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பின்னர் இது மத்திய அர்சின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் மத்திய அரசு இதுவரை ஒப்புதல் தரவில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பெயர்களை பாஜக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிவருகிறது. ஆனால், மேற்குவங்கத்தின் பெயரை பங்களா என்று மாற்றம் செய்வதற்கு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல தாமதித்து வருகிறது. மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை. ஆகவே அது பெயர் மாற்றம் தொடர்பாக தனது விருப்பப்படி முடிவு செய்யக் கூடாது. சட்டப்பேரவை தீர்மானத்துக்கும் மாநில மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மேற்குவங்கத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்