காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்நிலையில் வீரமரணம் அடைந்த அந்த வீரர்களின் உடல்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் அரசு மரியாதை செலுத்தி உடலை அடக்கம் செய்தன. போர் பதட்டம் அதிகரித்த இந்த சூழலில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு எல்லை தாண்டி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தியது. அதனை தொடர்ந்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இன்று காலை புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தங்கியிருந்த கிராமத்தை சுற்றி வளைத்த ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 இந்திய ராணுவ வீரக்கல் கொல்லப்பட்ட நிலையில் 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என தகவல் வெளியானது. மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி மேலும் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்ற வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.