மக்களவையில் ஆதார் அட்டை (AADHAAR CARD) தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாடு முழுவதும் மே 31 ஆம் தேதி கணக்கின் படி சுமார் 123.82 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சுமார் 7.37 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்தார். உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகமாக அதிக அளவில் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 20.57 கோடி மக்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் குறைந்த அளவாக 72,597 மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இருப்பினும் மத்திய அமைச்சர் உரையில் ஆதார் அட்டைகளுக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.