Published on 20/05/2020 | Edited on 20/05/2020

காசநோய்க்கு பயன்படுத்தப்படும் கருவிகளை கொண்டு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை 1.06 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 3300 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வரும் சூழலில், ஊரடங்கும் பல இடங்களில் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்கும் வகையில் காசநோய்க்கு பயன்படுத்தப்படும் கருவிகளை கொண்டு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த கருவியை முதல்கட்ட பரிசோதனைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.