Published on 19/01/2021 | Edited on 19/01/2021

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஒன்பது கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தாலும், இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இதனையடுத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான 10 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நாளை (20.01.21) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய வேளாண் அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனையை தீர்க்க, உச்சநீதிமன்றம் அமைத்த குழுவை விவசாயிகள் நிராகரித்த நிலையில் நாளை பேச்சுவார்த்தை நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.