ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி கருத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை திருடன் என ராகுல் காந்தி கூறியது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாளிதழில் வெளியான ஆவணங்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து இதனை சுட்டிக்காட்டி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியை திருடன் என நீதிபதியே கூறிவிட்டதாக கூறினார்.
இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாஜக எம்.பி. மீனாட்சி லேகி, ராகுல்காந்தி மீது குற்றநடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் 22ம் தேதிக்குள் இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.