Published on 05/07/2021 | Edited on 05/07/2021

சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி காலமானார்.
எல்கர் பர்ஷித் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டான் சுவாமி காலமானர். முன்னதாக, பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு சிறையில் உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. இதனிடையே அவருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் காலமாகியுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த ஸ்டான் சுவாமி ஜார்கண்டில் பழங்குடியினரின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.