உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 48 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்த ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள், அலுவலங்கள், பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கி வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் கரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 3 தேதி முதல் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார். இதுவரை இந்தியாவில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக எந்த மாநில முதல்வரும் அறிவிக்காத நிலையில், ஜெகன்மோகன் முதலாவதாக பள்ளிகள் திறப்பு பற்றி அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.