Skip to main content

பாஜகவின் திட்டம்... மறைமுகமாக விமர்சித்த சிவசேனா...

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களாக இரு கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

 

shivsena

 

 

காங்கிரஸ், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என முக்கிய கட்சிகள் அனைத்திற்கும் மத்தியில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் இன்னும் இழுபறியே நீடித்து வருகிறது. வரும் 9 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைவதால் ஆட்சியமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் மகாராஷ்டிரா கட்சிகள் உள்ளன.

இந்தநிலையில், சிவசேனாவின் புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிப்பதாக சிவசேனா மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளது. சிவசேனாவின் கட்சி பத்திரிகையான 'சாம்னா'வின்  தலையங்கத்தில், பாரதீய ஜனதா அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை வேட்டையாடி வருவதாக மறைமுகமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு என்ற  சிவசேனாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி  உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்