இந்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.39 சதவீதம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை குழு கூட்டம் அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் நாட்டின் பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.39 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், உயர்ந்த பணவீக்கம், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய மந்தநிலை பற்றிய அச்சங்களுக்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ரெப்போ விகிதத்தை 5.9 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவிகிதமாக உயர்த்தியுள்ளதாக ஆளுநர் சக்திகாந்த தாஸ் விளக்கமளித்தார். இதன் காரணமாக வீடு, வாகன லோன் வாங்கினால் மாத வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.