விடிய விடிய பப்ஜி விளையாடிய சிறுவன் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 14 வயது சிறுவன் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 3 நாட்களுக்கு முன்பு செல்போனில் அந்த கேமை டவுண்லோடு செய்துள்ளான். அப்போதிலிருந்து சிறுவன் பப்ஜி விளையாடிக் கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளான். பெற்றோர்களும் விளையாட வேண்டாம் என்று அவ்வப்போது கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் விடிய விடிய விளையாடிய சிறுவன் திடீரென தற்கொலை செய்து கொண்டான். கடந்த சனிக்கிழமை அதிகாலை சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.