Published on 30/12/2019 | Edited on 30/12/2019
ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், பயணிகள் ரயில் மற்றும், சரக்கு ரயில்களின் கட்டணத்தை மாற்றி அமைப்பது பற்றி ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். இதனையடுத்து ரயில்வே கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் விளக்கமளித்துள்ளார். அதில், "பயணிகள் மற்றும் சரக்கு ரயிலின் கட்டணத்தை உயர்த்துவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதேநேரம் புதிய ஆண்டில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரவும், கூடுதலாக ரயில்கள் இயக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளார்.