காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூர் சென்றார். பெங்களூர் சென்றவர் அங்கிருக்கும் எச்.ஏ.எல் நிறுவனத்திற்கு சென்று அங்கு வேலை செய்யும் பல ஊழியர்களை சந்தித்தார். மேலும் அந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, விமான தொழில்நுட்பத்தை மேம்படுத்த எச்.ஏ.எல். நிறுவனம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு எச்.ஏ.எல். ஊழியர்கள் சிறந்த பணியாற்ற முடியும் என்று கூறினார்.
முன்னதாக, ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக சொல்லும் காங்கிரஸ். மேலும் அந்த போர் விமானத்துக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்க மத்திய பொதுத்துறையான எச்.ஏ.எல் நிறுவனத்தை அனுகாமல், அவர்களிடம் அவ்வளவு வசதி இல்லை என்று ரிலையன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. இது முழுக்க முழுக்க தவறானது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக மிகப்பெரிய தவரை பாஜக செய்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.