Published on 14/10/2019 | Edited on 14/10/2019
அரியானாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, " நரேந்திர மோடி அம்பானி மற்றும் அதானிக்கு ஒலிபெருக்கியாக இருக்கிறார். உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதே அவரது வேலை. பொருளாதார மந்தநிலையால் இளைஞர்கள் வேலை இழக்கின்றனர். அடுத்த ஆறு மாதங்களில் நிலைமை மோசமடையப் போகிறது. பின்னர் மக்கள் மோடிக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள்.
மோடி டிரம்ப், அதானி மற்றும் அம்பானி ஆகியோருடன் காணப்படுகிறார், ஆனால் ஒருபோதும் விவசாயிகளுடன் இல்லை. பாஜக ஒரு தேசியவாத கட்சி என்றால், அவர்கள் ஏன் பொதுத்துறை நிறுவனங்களை விற்கிறார்கள் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். மோடி 15 பேருக்கு மட்டுமே வேலை செய்கிறார். அவர்கள் யார் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்" என்று கூறினார்.