பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று வேளாண் சட்டங்களை குப்பை தொட்டியில் வீசுவோம். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தால் ஏன் போராட்டங்களை நடத்துகின்றனர்? கரோனா சூழலில் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க வேண்டிய அவசியம் என்ன?, விவசாயிகள் நலனுக்காக என்றால் வேளாண் மசோதாக்கள் மீது ஏன் முழுமையாக விவாதம் நடக்கவில்லை? ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு பதிலாக பாதிக்கப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைப்பெற்ற பேரணியில் ராகுல்காந்தி, பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் ஜாஹர், விவசாயிகள் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.