Skip to main content

புதுச்சேரி அரசியல் பரபரப்பு... டெல்லி விரைந்த பாஜக நிர்வாகிகள்...

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

Puducherry political turmoil ... BJP executives Delhi quick

 

புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ நேற்று (16.02.2021) ராஜினாமா செய்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பிலும் 14 என்ற சமமான எண்ணைக்கையில் தொடர்வதால் பெருமான்மையை நிரூபிக்கும் சூழல் நாராயணசாமிக்கு ஏற்படுமா? யாருக்கு ஆட்சி? என புதுச்சேரி அரசியல் படுவேகத்தில் பரபரப்புகளுடன் நகர்ந்து வருகிறது.

 

இன்று காலை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் துணைநிலை ஆளுநர் அலுவகத்தில் ‘புதுச்சேரி முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்’ எனக் கடிதம் வழங்கினர். ஆளுநரின் செயலாளரிடம் இந்தக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பேரில் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன், புதுவை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அண்மையில் பாஜகவில் சேர்ந்த நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி புறப்பட்டுள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்