Published on 16/09/2022 | Edited on 16/09/2022
புதுச்சேரியில் வரும் 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாவே வைரஸ் காய்ச்சல் பரவல் புதுச்சேரியில் அதிகமாக இருப்பதால் நாளை முதல் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுகாதாரத்துறை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க பரிந்துரை செய்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரியின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.