
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் வரும் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருப்பதால், இறுதிகட்ட பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேசிய அளவிலான தலைவர்கள் தமிழகத்தில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (02.04.2021) பிரதமர் மோடி, தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே தமிழகத்தில் ராகுல் காந்தி, பல கட்டங்களாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நாளை தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட இருந்தார். இந்தநிலையில் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை இரத்தாகியுள்ளது.
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிற்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, தனக்கு கரோனா உறுதியாகவில்லை என்றாலும், மருத்துவர்களின் அறிவுரைப்படி பிரியங்கா காந்தி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனால் அவரது தமிழக வருகை இரத்து செய்யப்பட்டுள்ளது.