
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பெல்ட் குண்டுக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாக கூறி தமக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார். இம்மனு மீது நடந்த விசாரணையில், ராஜீவ்காந்தி கொலையில் பெல்ட் குண்டுதான் பயன்படுத்தப்பட்டதா? அது எங்கு தயாரிக்கப்பட்டது என்று சிபிஐ தெரிவிக்கவில்லை என பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, பெல்ட் வெடிகுண்டு குறித்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உத்தரவிடப்பட்டது. முன்னர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் திருப்தி இல்லை. எந்த புதிய விசயமும் இல்லை என்பதால் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.