Published on 31/08/2019 | Edited on 31/08/2019
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறிய மக்களை அடையாளம் காண அறிமுகம் செய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவுப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2018 ஜூலை 30ல் வெளியிடப்பட்ட வரைவுப்பட்டியலில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டதால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அசாமில் வசிக்கும் மொத்த மக்களில் 19 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெயர் இந்த குடிமக்கள் பதிவேட்டின்(NRC) இறுதிப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. நீண்ட காலாக வசிக்கும் பலரது பெயர்கள் இந்த பட்டியலில் விடுபட்டிருப்பதால் அசாம் மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அம்மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.