Published on 24/01/2022 | Edited on 24/01/2022

இந்தியாவில் தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்தநிலையில், தற்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சரத் பவார், கவலைப்படும்படியாக ஒன்றுமில்லை எனவும், மருத்துவர்கள் கூறிய சிகிச்சையைப் பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சரத் பவார், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.